Friday, July 14, 2017

3 மாதங்களுக்கு 100ஜிபி இலவச டேட்டா - இது ஜியோபைபர் வெல்கம் ஆபர்.!

  3 மாதங்களுக்கு 100ஜிபி இலவச டேட்டா - இது ஜியோபைபர் வெல்கம் ஆபர்.! 


ரிலையன்ஸ் ஜியோ பொருத்தவரை இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, அதன்பின்பு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். இந்தியாவில் கிராம் முதல் நகரம் வரை அனைத்து மக்களும் ஜியோ இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

தற்போது ஜியோ ஃபைபர் மூலம் அட்டகாசமான இன்டர்நெட் திட்டத்தை அறிவித்துள்ளது, அதன்படி 4ஜி சேவைகள் இனிமேல் மிக அருமையாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! 

ரிலையன்ஸ் ஜியோ : ஜியோ ஆரம்பம் முதல் இப்போது வரை பல இலவசங்கள் மற்றும் பல சலுகை கட்டணங்கள் போன்றவற்றை வழங்கிவருகிறது, இப்போது அந்நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ஃபைபர் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, மேலும் இதன் பல தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஜியோ கட்டணத்திருத்தம்: ஜியோ தற்போது போஸ்ட்பெய்டு மற்றும் பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் மற்றும் கட்டணத்திருத்தங்களை அறிவித்தது, இதன் மூலம் பல வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது இந்தக்கட்டணத் திருத்தம். 


ஜியோ ஃபைபர் : இப்போது இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நொடிக்கு 100 எம்பி வேகத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று இணையத்தில் தகவல்கள் வந்துள்ளது.எனினும் வாடிக்கையாளர்கள் செக்யூரிட்டி டெபாசிட் ரூ.4,500 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் 100ஜிபி: இந்த திட்டம் பொருத்தவரை மாதம் 100ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு சேர்த்து 300ஜிபி டேட்டா வரைக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மாதம் 100 ஜிபி பயன்படுத்தியதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாக குறைக்கப்படும்.


ஜியோ ஃபைபர் திட்டம்: இந்த ஜியோ ஃபைபர் ஆரம்ப திட்டம் மும்பை, டெல்லி,கொல்கத்தா,ஐதராபாத்,ஜெய்ப்பூர்,சூரத்,வதோதரா மற்றும் விசாகபட்டிணம் போன்ற இடங்களில் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வேகம்: தற்போது ஜியோ இன்டர்நெட் வேகம் சற்று குறைவாகதான் உள்ளது, மேலும் மற்ற நிறுவனங்களின் இன்டர்நெட் வேகம் இதைவிட அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மும்பை மற்றும் புனே: மும்பை மற்றும் புனே போன்ற பகுதிகளில் ஜியோ ஃபைபர் சோதனை நடத்தப்பட்டது, அப்போது இண்டர்நெட் வேகம் நொடிக்கு 70 முதல் 100 எம்பி வரைஇருந்ததாக அந்நிறுவம் தெரிவித்தது. ரவுட்டர்கள்: ஜியோ தற்போது அறிவித்துள்ள இந்த திட்டத்தில் ரவுட்டர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது, மேலும் இவை அனைத்து இடங்களிலும் வைத்து உபயோகப்படுத்த உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, இதற்கான கட்டணம் செக்யூரிட்டி டெபாசிட் தொகையில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment